முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காள தேசம் 19 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் 45 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் ரஷீத்கான் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரஷீத்கான் 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை கைப்பற்றினார். முதல் விக்கெட்டை எடுத்த போது அவர் 50-வது விக்கெட்டை தொட்டார். 31 போட்டியில் அவர் 52 விக்கெட் எடுத்து உள்ளார்.
இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை இம்ரான்தாகீருடன் (தென் ஆப்பிரிக்கா) இணைந்து பெற்றார்.
அஜந்தா மெண்டீஸ் (இலங்கை) 26 ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருக்கிறது.#ImranTahirs #RashidKhan