செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரன்வீர் சிங் - வைரலாகும் வீடியோ

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு ரன்வீர் சிங் ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

இதனால் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக ஏழுமுறை வீழ்த்தி சாதனை படைத்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டியினை காணவந்த அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவருக்கு போட்டியினை காணவந்த இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகரை கட்டி அணைத்து, “உங்கள் நாட்டு அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிக நுட்பமாகவும் விளையாடினர். ஆகையால் நம்பிக்கையினை இழக்க வேண்டாம் எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது” என ரன்வீர் சிங் ஆறுதல் கூறுகிறார்.

இந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.