செய்திகள்

ரஞ்சி டிராபி: ஆந்திரா, கர்நாடகா, சவுராஷ்டிரா, குஜராத், ஐதராபாத், டெல்லி அணிகள் வெற்றி

ரஞ்சி டிராபி தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் கர்நாடகா, சவுராஷ்டிரா, விதர்பா, ஐதராபாத், மும்பை பஞ்சாப் போன்ற அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மாலை மலர்

இதில் மத்திய பிரதேச அணிக்கெதிரான போட்டியில் ஆந்திரா 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் அன்மோல்ப்ரீத் சிங்கின் இரட்டை சதத்தால் (267) பஞ்சாப் இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உத்தர பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 4 விக்கெட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரியானாவிற்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜம்மு- காஷ்மீருக்கு எதிரான போட்டியில் கேரளா 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவிற்கு எதிரான போட்டியில் கர்நாடகா இன்னிங்ஸ் மற்றும் 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடகா அணியின் அகார்வால் முச்சதம் (129) அடித்தார். ஒடிசாவிற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெயில்வேஸ் அணிக்கெதிரான போட்டியில் ஐதராபாத் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் அணிக்கெதிரான போட்டியில் சவுராஷ்டிரா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வீசஸ் அணிக்கெதிராக விதர்பா 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிபுரா - பரோடா, இமாச்சல பிரதேசம் - பெங்கால் இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.