அடுத்து வந்த கவுசிக் காந்தி 22 ரன்களும், பாபா இந்திரஜித் 19 ரன்களும் எடுத்தனர். பாபா அபரஜித் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 51 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த அஸ்வின் (9), வாஷிங்டன் சுந்தர் (14), ஜெகதீசன் (0), ஷா (15) ரன்களில் ஆட்டமிழக்க தமிழ்நாடு 176 ரன்னில் சுருண்டது. கே. விக்னேஷ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.