தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் 17-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்கும் ரஞ்சி டிராபி அரையிறுதியில் விளையாட இசாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்டில் விளையாட இசாந்த் சர்மாவிற்கு கணுக்காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சி டிராபியில் விளையாடினால் காயத்தின் வீரியம் அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் இசாந்த் சர்மா டெல்லி அணிக்காக விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.