கொரோனா வைரஸ் 
செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.