கைது 
செய்திகள்

ராணிப்பேட்டையில் தொழிலாளியை தாக்கியவர் கைது

ராணிப்பேட்டையில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை வக்கீல் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவரிடம் நேற்று முன்தினம் ஆற்றுக்கால்வாய் தெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு ஆறுமுகம் என்னிடம் தீப்பெட்டி இல்லை வேறு யாரிடமாவது வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், ஆறுமுகத்தை அசிங்கமாக திட்டி, இரும்புக் கம்பியினால் தாக்கியுள்ளார். மேலும் அவரை மிரட்டியதாகவும் கூறபடுகிறது.

இதுகுறித்து ஆறுமுகம் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT