சிப்காட்(ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை அருகே உள்ள அவரக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 30), லாரி டிரைவர். இவரின் மனைவி பிரியா. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறால் கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரியா தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார். இதனால் மனவேதனையில் இருந்த குமரேசன் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.