செய்திகள்

மக்கள் துணையோடு மீண்டும் ஆட்சி அமைப்போம்: ரங்கசாமி

மக்கள் ஒத்துழைப்புடன் ஆசியுடன் துணையோடு மீண்டும் ஆட்சியமைப்போம் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் 8-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. புதுவை மாநில வளர்ச்சியிலும் மக்கள் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பாடுபடுவோம். எங்கள் நோக்கம் எப்போது புதுவை மக்களின் முன்னேற்றத்திற்காகவே இருக்கும்.

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தொடர்ந்து தனி மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துவோம். மக்கள் ஒத்துழைப்புடன் ஆசியுடன் துணையோடு மீண்டும் ஆட்சியமைப்போம்.

புதுவை மாநில மக்களுக்காக என்.ஆர். காங்கிரஸ் தக்க நேரத்தில் தேவையான போராட்டத்தில் ஈடுபடும். யாருடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று அனைவருக்கும் தெரியும்.

பிரதமர் நரேந்திர மோடி ஆரோவில் வரும் போது அவரை நிச்சயம் சந்திப்போம்.

கட்சியை வளப்படுத்தி எதிர்காலத்தில் தேர்தலை சந்தித்து முழு வெற்றியை பெற அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார். #tamilnews