செய்திகள்

வறுமையால் வாழ்விழந்த குடும்பம் - 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தங்களது வீட்டிலேயே தூக்கிட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Ranchi #Jharkhand #Sucide

மாலை மலர்

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அர்சாண்டே. இந்த கிராமத்தில் வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூக்கிட்டு இறந்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

அங்கு 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.