செய்திகள்

ஏரி நிலத்தை ஆக்கிரமித்த கேரள மந்திரி பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் போர்கொடி

கேரள மாநிலத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்த போக்குவரத்து துறை மந்திரி பதவி விலக வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மந்திரிசபையில் போக்குவரத்து துறை மந்திரி பதவி வகிப்பவர், தாமஸ் சாண்டி. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஏரி நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திருவனந்தபுரம் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ஆலப்புழாவில் ஏரி நிலத்தை மந்திரி தாமஸ் சாண்டி ஆக்கிரமித்து வைத்துள்ள தகவலை அம்மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

தாமஸ் சாண்டி

SCROLL FOR NEXT