தற்கொலை 
செய்திகள்

ராமாபுரம் அருகே கணவருடன் தகராறு- இளம் பெண் தற்கொலை

ராமாபுரம் அருகே கணவருடன் தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன். மெட்ரோ ரெயில் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜ ராஜேஸ்வரி (வயது 25) கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த ராஜ ராஜேஸ்வரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் மற்றும் போலீசார் சிவகார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவகார்த்திகேயன், ராஜ ராஜேஸ்வரி இருவரும் காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். ராஜ ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே 2010-ம் ஆண்டு சபரிநாதன் என்பவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்ததும் சிவகார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில நாட்களாக தினமும் மது குடித்து விட்டு வந்து ராஜ ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார். நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ராஜ ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.