செய்திகள்

ராமாபுரத்தில் மனைவி-குழந்தைகள் தற்கொலை வழக்கில் கணவர் கைது

ராமாபுரத்தில் மனைவி-குழந்தைகள் தற்கொலை வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

ராமாபுரம் ராயலா நகர் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை வயது44 அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி அபிதா (28).

இவர்களுக்கு லட்சுமி நாராயணன் (10) ஸ்ரீமகா லட்சுமி (6) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

கடந்த மாதம் 23-ந்தேதி அபிதா நான் எந்த விதத்திலும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்று கணவர் செந்தாமரைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை சம்பவத்தில் தீடீர் திருப்பமாக அபிதாவின் தாய் சாந்தா தியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாரிடம் நேற்று புகார் மனு அளித்தார் அதில் எனது மகள் அபிதா மற்றும் குழந்தைகள் சாவிற்கு கணவர் செந்தாமரை தான் காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதன்பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், செந்தாமரையை கைது செய்தார்.