பிரதமர் மோடி 
செய்திகள்

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம், சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், நாகை பனங்குடியில் அமைய உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டது.

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.