ராமநாதபுரம்:
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 20 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றி சென்ற 4 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 364 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 89 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 17 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 79 பேர் மீதும் என மொத்தம் 574 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.88 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது.