ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 92 மதுபாட்டில்களையும், ரூ.710-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.