கேபி முனுசாமி, தம்பிதுரை, ஜிகே வாசன். 
செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்பு மனுதாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கேபி முனுசாமி, ஜிகே வாசன் ஆகியோர் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

மாலை மலர்

சென்னை:

பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியான எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க. சார்பில் 3 பேரும், அ.தி.மு.க. சார்பில் 3 பேரும் இந்த எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். 13-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.