புதுடெல்லி:
24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்க்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3, கர்நாடகா 4, அருணாசல பிரதேசம் 1, மிசோரம் 1 என மொத்தம் 24 இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். ஜூன் 19-ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.