புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை மாநிலங்களவை கூடியது. குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு காங்கிரஸ் எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் அவர்கள் கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர். அவர்கள் அமைதியாகாததை தொடர்ந்து, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.