செய்திகள்

மூன்றாவது வாரமாக கடும் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அம்மாநில எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் 15 நாளாக இன்றும் மாநிலங்களவை முடங்கியது. #RajyaSabha

மாலை மலர்

புதுடெல்லி:

கடந்த 5-ம் தேதி கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், வங்கி மோசடி ஆகிய விவகாரங்களில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நேரம் அவை முடங்கியது.

15-வது நாளான இன்று மாநிலங்களவையில் ஆந்திர எம்.பி.க்கள் பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, மாநிலங்களை வரும் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திர எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அமளி காரணமாக கடந்த 6 நாட்களாக அந்த நோட்டீஸ் மீது விவாதம் நடக்கவில்லை. #RajyaSabha #TamilNews