செய்திகள்

பல்வேறு விவாகரங்கள் குறித்து அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்களன்று கூடியது. மாநிலங்களவையில் இன்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் என பல விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகரின் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து முதலில் 2 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. 

கடந்த 5-ம் தேதி கூடிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மேற்கண்ட விவகாரங்கள் காரணமாக தொடர்ந்து ஐந்து நாட்களாக முடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் முயற்சியும் தோல்வியடைந்தது. #LokSabha #RajyaSabha #TamilNews

SCROLL FOR NEXT