செய்திகள்

இமயமலைக்கு ஆன்மீக பயணம்- ரஜினிகாந்த் ரிஷிகே‌ஷத்தில் வழிபாடு

ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்துக்கு சென்று வழிபாடு செய்தும், தியானத்திலும் ஈடுபட்டுள்ளார். #Rajinikanth

சென்னை:

அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.

இமாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்த்ரகாண்ட் மாநிலங்களில் இமயமலைச் சரிவில் உள்ள புனித தலங்களுக்கும், யோகா, தியான மையங்களுக்கும் செல்கிறார்.

இமாச்சல பிரதேசம், காஷ்மீரிலும் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்றார். அங்குள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரஜினிகாந்த் 15 நாட்கள் வரை தங்கி இருந்துவிட்டு சென்னை திரும்புகிறார். அதன்பிறகு தனது முழுநேர அரசியல் பற்றி அறிவிக்கிறார்.

இமயமலையில் புனித பயணம் மேற்கொண்டுள்ளதால் அரசியல் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். #Rajinikanth