லடாக்கில் ராஜ்நாத் சிங் 
செய்திகள்

முதல் முறையாக லடாக் சென்றார் ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு லடாக்கிற்கு முதல் முறையாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்றார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக் பகுதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செல்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதல் முறையாக லடாக்கிற்கு இன்று சென்றார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். லடாக் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.