புதுடெல்லி:
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை அந்தமான் செல்கிறார். இருநாட்கள் அங்கு தங்கி இருக்கும் அவர், போர்ட் பிளைர் துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்தில் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுதவிர, திக்லிப்பூர் நெடுஞ்சாலை திட்டம், உட்டரா பாராட்டங் மேம்பால திட்டம், ஹம்ப்ரி ஜலசந்தி திட்டம் போன்றவற்றுக்கும் அடிக்கல் நாட்டும் ராஜ்நாத் சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.