உஸ்பெகிஸ்தான் ராணுவ மந்திரியுடன் ராஜ்நாத் சிங் 
செய்திகள்

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் சென்றார் ராஜ்நாத் சிங்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தாஷ்கன்ட் வந்தடைந்தார்.

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கன்ட்  நகரில் நடைபெறுகிறது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து  3 நாள் அரசுமுறை பயணமாக புறப்பட்டு சென்ற இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் தாஷ்கன்ட் வந்தடைந்தார்.