ராஜ்நாத்சிங் 
செய்திகள்

என்.சி.சி. ஆன்லைன் பயிற்சிக்கான செயலி - ராஜ்நாத்சிங் அறிமுகப்படுத்தினார்

என்.சி.சி. ஆன்லைன் பயிற்சிக்கான செயலியை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று அறிமுகப்படுத்தினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக, என்.சி.சி. மாணவர்களுக்கான பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ‘டி.ஜி.என்.சி.சி.’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலியில், பயிற்சி பாடத்திட்டங்கள், பயிற்சி வீடியோக்கள், கேள்வி-பதில் வடிவிலான விளக்கங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயிற்சியாளர்கள் பதில் அளிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.