சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான தங்கள் அர்ப்பணிப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக திகழ்வதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனரை நியமனம் செய்ததை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.