செய்திகள்

கருணாநிதியை சந்திக்க வந்த ரஜினிகாந்தை ஸ்டாலின் வரவேற்றார்

நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு சந்தித்து பேசினார். அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். #Rajinikanth #Karunanidhi

மாலை மலர்

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை 

தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் 

அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்க போவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில், போய்ஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்ட ரஜினிகாந்த், கருணாநிதி எனது நீண்ட கால நண்பர் என நிருபர்களிடம் கூறினார்.

சரியாக, 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

கருணாநிதியை சந்தித்து வணக்கம் தெரிவித்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் புத்தாண்டு 

வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

#tamilnews #Rajinikanth #Karunanidhi