செய்திகள்

ரஜினிகாந்த் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமையும்: அர்ஜூன் சம்பத் பேச்சு

இந்து மக்கள் கட்சி நடிகர் ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி திராவிட இயக்கங்கள் இல்லாத புதிய அரசை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்று அர்ஜூன் சம்பத் பேசினார்.

மாலை மலர்

கோவை:

கோவை ராஜவீதியில் தேர்நிலை திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அதன் பிறகு ஆட்சி கவிழும். அ.தி.மு.க.- தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகளின் அத்தியாயம் முடிவுக்கு வரும்.

இந்து மக்கள் கட்சி நடிகர் ரஜினிகாந்தை முன்னிலைப் படுத்தி திராவிட இயக்கங்கள் இல்லாத புதிய அரசை தமிழகத்தில் ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.