செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் பதவி பறிப்பு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக எஸ்.எம்.தம்புராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

புதிய கட்சியை தொடங்கும் முன்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக எஸ்.எம்.தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னரே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்த எஸ்.எம்.தம்புராஜ் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக உள்ள எஸ்.எம்.தம்புராஜ், மன்றத்தின் ஒற்றுமைக்கும், ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

அவருடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நன்கு கண்காணித்து அதில் திருப்தி இருக்கும் பட்சத்தில் அவரது பதவி குறித்து பரிசீலிக்கப்படும். ரஜினி மன்ற நிர்வாகிகள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவரையில் திண்டுக்கல் மன்ற செயலாளர் பொறுப்பை மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் கவனிப்பார். அவருக்கு மன்ற நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரஜினிகாந்தின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews