செய்திகள்

ஐ.பி.எல். வீரர்கள் புதிதாக ஏலம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெயரை மாற்ற விருப்பம்

ஐ.பி.எல். சீசன் 2018-ல் வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெயரை மாற்ற விரும்புகிறது.

மாலை மலர்

அடுத்த வருடம் 11-வது சீசன் நடைபெற இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் இறங்க இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கெய்ல், பொல்லார்டு போன்ற வீரர்கள் ஒரே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இதனால் மற்ற அணிகள் பெரிய வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது.

ஆகவே, 11-வது சீசனுக்காக புதிதாக ஏலம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் களம் இறங்க இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது பெயரை மாற்ற விரும்புகிறது.