செய்திகள்

ராஜஸ்தான்: காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது - புதிய அரசு விடுமுறை அட்டவணை வெளியீடு

ராஜஸ்தானில் அரசு அம்மாநிலத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களுக்கான புதிய விடுமுறை அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதில் காந்தி ஜெயந்திக்கு அரசு விடுமுறை அளிக்கப்படவில்லை.

ஜெய்பூர்:

ராஜஸ்தானில் இயங்கிவரும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான அரசு விடுமுறைகளுக்கான புதிய அட்டவணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அந்த புதிய அட்டவணையில் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்திக்கு) விடுமுறை அளிக்கப்படவில்லை. இந்த புதிய அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

காந்தி ஜெயந்தி அன்று மத்திய அரசு விடுமுறையாகும். அந்த விடுமுறையை ராஜஸ்தான் மாநில அரசு ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT