மீட்புப்பணியில் வீரர்கள் 
செய்திகள்

ராஜஸ்தான் படகு விபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மாலை மலர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் இந்தர்கர் பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு 45-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சம்பல் நதியில் படகில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலர் ஆற்றில் மூழ்கினர். இதில் 3 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய 19 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.