ராஜபாளையம்:
ராஜபாளையம் ஆவரம்பட்டியில் உள்ள அரசுபோக்குவரத்தக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்தக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் திருவேட்டை போத்தி(எல். பி.எப்), சன்னாசி (சி.ஐ.டி.யு). தர்மசாஸ்தா-(ஏ.ஐ.டி.யு.சி).காளிமுத்து(பி.டி.எல்.எப்), ராமசாமி (டி.டி.எஸ்.எப்), முத்துராஜ்(தே.மு. தி.க) சக்திவேல் (சாலை பாதுகாப்பு), திருப்பதி (டி.டி.யு.சி), ரமேஷ் குமார்(வி.சி.க)ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்களின குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களின் சம்பளம் பிடித்த பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கக் கோரியும், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளன்றே பென்சன் தொகை முழுவதையும் வழங்கக் கோரியும், ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஜ.டி.யு மாவட்டத் துணைத்தலைவர் கணேசன் பேசினார்.