ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 24). இவருக்கும் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த கருப்பையா (26) என்பவருக்கும் 23.11.17 அன்று திருமணம் நடந்தது.
இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு கணவன்-மனைவி சேத்தூருக்கு மறுவீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது கருப்பையாவுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதை பார்த்து முத்துமாரி அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உறவினர்கள் கருப்பையாவை அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். அதன் பின் முத்து மாரி கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறி தாய் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று கருப்பையா சேத்தூருக்கு சென்று முத்து மாரியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கருப்பையா மீது முத்துமாரி சேத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திவ்யா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.