செய்திகள்

ராஜபாளையத்தில் 4,184 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் கைது

ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தன.

இதையடுத்து டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசு தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அம்பலப்புளி பஜார் குருசாமி கோவில் அருகே திருப்பதி (வயது 58) என்பவரின் கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரத்து 184 புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடை உரிமையாளர் திருப்பதியை கைது செய்தனர்.