வாலிபர் மரணம் 
செய்திகள்

ராஜபாளையம் அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

ராஜபாளையம் அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ராஜபாளையம்:

ராஜபாளையம் மேல வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சிவராமன் (வயது19). இவர் டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார்.

நேற்று முகவூர் சொக்க நாதன்புரத்தில் செங்கல் பாரம் ஏற்றுவதற்காக சிவராமன் டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சாலை சகதியாக காணப்பட்டது

ஒரு திருப்பத்தில் சிவராமன் திருப்பியபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்தது. அதை ஓட்டிச்சென்ற சிவராமன் கீழே விழுந்தார்.

அவர் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சிவராமன் உடல் டிராக்டருக்கு அடியில் சிக்கி கொண்டதால் கிரேன் வர வழைக்கப்பட்டு டிராக்டரை அப்புறப்படுத்திய பின்னரே சிவராமன் உடலை மீட்க முடிந்தது.