ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் தெக்குறிச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராமன். இவருடைய மனைவி வசந்தி (வயது 42). தும்பு மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த தம்பதி சொந்தமாக வீடு வாங்க சிலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வசந்தி மனம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது. சம்பவத்தன்று இரவு விஷம் குடித்த நிலையில் வசந்தி வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.