ஆர்.ராஜகோபால் 
செய்திகள்

தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ராஜகோபால் நியமனம்

தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ராஜகோபாலை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் முன்னாள் ஆலோசகர் ஆர்.ராஜ கோபால் மாநில பணிக்கு திரும்பியுள்ளார். அவர் தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கவர்னரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT