மும்பை:
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் மும்பையில் நாளை நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்து கொள்கிறார்.
அதேவேளையில், மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா சார்பில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிலையில், தெற்கு மும்பை பகுதியில் உள்ள சரத் பவாரின் வீட்டுக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று திடீரென சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது, அரசியல் தொடர்புடையது அல்ல என பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்தாக்கரே கூறினார். #tamilnews #RajThackeray #Pawar