ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில அரசில் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் பாபு லால் வெர்மா. அவர் நேற்று இரவு 1 மணிக்கு பாரன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு திரும்பி சென்ற போது சாலையின் குறுக்கே ஓடி வந்த எருமை மீது கார் மோதியது. பின்னர் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாபு லால், அவருடைய உதவியாளர் ராஜேந்திர பிரசாத் ராகர் மற்றும் கார் டிரைவர் மோதி லால் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மந்திரியின் உதவியாளர் ராஜேந்திர பிரதாஸ் ராகர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஐ.சி.யு. வில் சிகிச்சை பெற்று வந்த மந்திரி வெர்மாவின் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.