தூத்துக்குடி கோவங்காடு மதிகெட்டான் ஓடை பகுதியில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கும் காட்சி 
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை பெய்தது. இதனால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

முள்ளக்காடு:

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இந்த சாரல் மழை நேற்று மதியம் வரை நீடித்தது. நேற்று மதியத்துக்கு பிறகு லேசான வெயில் அடித்தது.

இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் விவசாய பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

கயத்தார் -3.3

மணியாச்சி -1.5

சாத்தான்குளம் -9.2

தூத்துக்குடி -6.9