செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் தாமதம்: ரசிகர்கள் ஏமாற்றம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாலை மலர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி நல்ல அடித்தளம் அமைத்தது. 10-வது ஓவரின் போது மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து ஆடிய துவக்க வீரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து முன்னேறிய ஷிகர் தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 136 ரன்கள் குவித்தது. அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் இணைந்த கேப்டன் கோலி, நிதானமாக விளையாடினார்.