மும்பை நகரின் பரேல் - எல்பின்ஸ்டன் சாலையை இணைக்கும் ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று முன்தினம் அதிக கூட்டத்தினால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
மும்பையில் முகாமிட்டுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.