ரெயிலில் தவறி விழுந்தவரை காப்பாற்றிய போலீசார் 
செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் தவறி விழுந்தவரை காப்பாற்றிய போலீசார்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவரை காப்பாற்றிய போலீசாரை அனைவரும் பாராட்டினர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் விஜயகுமார்.

நேற்று மாலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் பணியில் இருந்தார். மாலை 6.45 மணியளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அப்போது அவசர அவசரமாக கையில் பையுடன் ஓடிவந்த பயணி ஒருவர் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏற முயன்றார். ஆனால் அவரது கால் தடுமாறி ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதை கவனித்த போலீஸ்காரர் விஜயகுமார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த பயணியை பிடித்து பெட்டிக்குள் தள்ளினார். உடனே மற்ற பயணிகள் அவரை உள்ளே இழுத்தனர். பயணியை காப்பாற்றிய விஜயகுமாரை அனைவரும் பாராட்டினார்கள்.