செய்திகள்

மாணவர்களுக்கு பரிமாறிய மதிய உணவில் பாம்பு: அரியானா அரசுப் பள்ளிகளில் பறக்கும் படை அதிரடி சோதனை

அரியானா மாநிலத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மற்ற பள்ளிகளில் முதலமைச்சரின் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கடந்த 11-ம் தேதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை தலைமை ஆசிரியர் ருசி பார்க்க சென்றார். அப்போது உணவில் இறந்த பாம்புக் குட்டி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து மாணவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் என கூறி எச்சரித்தார். அத்துடன் உயர் அதிகாரிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்தார். இதுபற்றி, உணவு சமையத்த ஊழியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மதிய உணவின் தரம் குறித்து முதலமைச்சரின் பறக்கும்படையினர், இன்று ஆய்வு செய்தனர். உன்சா கான், சந்திரவலி, அகைர்வத் மற்றும் திகாவோன் சாலையில் உள்ள பள்ளிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.