செய்திகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுதினம் சிங்கப்பூர் பயணம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுதினம் சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்ற உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுதினம் சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்ற உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்காக கட்சி தலைவரான ராகுல் காந்தி மார்ச் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தில் முதல் கட்டமாக அவர் நாளை மறுதினம் (8-ம் தேதி) சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள லீ குவான் யூ பள்ளி, சிங்கப்ப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்திய வம்சாவளியினர் இடையே அவர் உரையாற்ற உள்ளார்.

இதேபோல், மார்ச் 10-ம் தேதி மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் உரையாற்றுகிறார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி மாகாணத்தில் ராகுல் காந்தி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.