சென்னை:
கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தனர். யாரை புதிய தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றியும் கருத்து கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக மேலிட பார்வையாளர்களில் ஒருவரான சஞ்சய்தத் நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதி என்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.
இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகில் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்கிறார்.