கோலாலம்பூர்:
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று (9-ம் தேதி) சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் வாழ் இந்திய நலச்சங்கத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின் சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கையும், துணை பிரதமர் தர்மன் சண்முகநாதனையும் சந்தித்து பேசினார்.
சிங்கப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் நினைவிடம் சென்ற ராகுல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களையும் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று மலேசியா சென்ற ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய வாழ் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறுகையில், ‘ஒருவேளை நான் பிரதமராக இருக்கும்பட்சத்த் யாராவது பணமதிப்பிழப்பு குறித்த கோப்பைகளை என்னிடம் கொடுத்திருந்தால், உடனடியாக அவற்றை குப்பை தொட்டியிலோ, என் அறைக்கு வெளியிலோ, தேவையற்ற பொருட்கள் சேமிக்கப்படும் இடத்திலோ வீசியிருப்பேன். அப்படிதான் நான் அவற்றை வெளியே வீசியிருப்பேன், அது நல்லதல்ல என்பதால் அதை என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்’, என கூறினார். #RahulGandhi #Malaysia #KualaLampur #Demonetisation #tamilnews