செய்திகள்

பா.ஜனதாவுக்கு எதிரான வீடியோவை வெளியிட்டார் ராகுல் காந்தி

பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், தலித்துகளுக்கு எதிராக பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார்.

மாலை மலர்

புதுடெல்லி:

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், தலித்துகளுக்கு எதிராக பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். அது, 2 நிமிடம் ஓடும் வீடியோ ஆகும்.

அதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில், “பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் தலித் விரோத மனப்பான்மையையும், அதை அவர்கள் எப்படி வெளிப்படையாக பிரசாரம் செய்கிறார்கள் என்பதையும் இப்படம் விளக்குகிறது. அவர்களின் பாசிச சித்தாந்தத்தால், தலித்துகள், சமூகத்தின் அடிமட்டத்திலேயே இருக்க வேண்டி உள்ளது” என்றார்.